Please Subscribe to Our Whatsapp Channel in the link below

https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a

Please Visit and Subscribe to our YouTube Channel through the link below
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w

மலரடி சரணம் ஐயப்பா சபரி
மலை திகழ் சந்நதி
சரணம் ஐயப்பா!

குருடு ஊமையானதோர் குருநாதர் சேயனின்
குறைதீர்த்து வைத்த இறைவா!
கருணாகரா! கலியின் கண்கண்ட தெய்வமே!
கருமவினை நீக்கும் தேவா!

மலரடி சரணம் ஐயப்பா சபரி மலைதிகழ் சந்நதி சரணம் ஐயப்பா!

புலிப்பால் கரந்திட புலிப் படையுடன் சிங்கப்புற மீது பவனி வந்தாய்!
புவியெல்லாம் போற்றிட
புதுமை பல காட்டியே சபரிகிரிதனில் அமர்ந்தாய்!

மலரடி சரணம் ஐயப்பா சபரி மலைதிகழ் சந்நதி சரணம் ஐயப்பா!

தீராத நோய் எல்லாம் தீர்ந்திடுமே!
உந்தன் திருநாம மந்திரத்தால்! ஆறாத மன வலியும் ஆறிவிடுமே அன்பின் அருளாம் அனுகிரகத்தால்!

மலரடி சரணம் ஐயப்பா சபரி மலைதிகழ் சந்நதி சரணம் ஐயப்பா!
உலக ஜோதியே சரணம் ஐயப்பா!
உண்மை சொரூபா! சரணம் ஐயப்பா!
நல உறைவிடமே சரணம் ஐயப்பா!
அநாதி ரட்சகா! சரணம் ஐயப்பா!

சரணம் ஐயப்பா!

சரணம் ஐயப்பா!

சரணம் ஐயப்பா!